தடுப்பூசிகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கரோனாவின் இரண்டாம் அலையை சரியாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய மத்திய விஸ்டா திட்டத்தை கரோனா காலத்தில் செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், மத்திய விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் காரணமாக மத்திய அரசை ராகுல்காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
» சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 256 காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள்: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுப்பிவைப்பு
இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ தடுப்பூசிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுடன் பிரதமரையும் காணவில்லை. தற்போது மீதம் இருப்பவை எல்லாம் மத்திய விஸ்டா திட்டம், பிரதமரின் புகைப்படங்கள், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,62,727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,120 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை ஒட்டு மொத்தமாக 2.3 கோடி பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago