விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.6,000 நிதியுதவி: 8-வது தவணையை நாளை பிரதமர் மோடி விடுவிக்கிறார்

By செய்திப்பிரிவு

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் 8-வது தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி மே 14-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்கிறார்.

இதன்படி 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,000 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடலிலும் ஈடுபடுவார். மத்திய வேளாண் அமைச்சரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.15 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்