தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் குழு அமைத்து உத்தரப்பிரதேச அரசின் இளம் உயர் அதிகாரிகள் உதவுகின்றனர். கரோனா பரவலால் பாதிக்கப்படுபவர்களுக்கு செய்யும் தமது உதவிகள் உரிய முறையில் போய் சேருகிறதா? என போனிலும் உறுதி செய்து கொள்கின்றனர்.
லக்னோவின் ஜெய்பூரியா இன்ஸ்டியூட் ஆப் மேனஜ்மேன்டின் இயக்குநராக இருப்பவர் கவிதா பாதக். கோமதி நகர்வாசியான அவரது தந்தை மோஹன் சந்தர் ஜோஷி(85), கடந்த மே 2 இல் கரோனா பாதித்துள்ளது.
மருத்துவமனைகளில் இடம் தேடி போன் செய்து கொண்டிருக்கும் போது இரவாகி விட ஆக்சிஜன் சிலிண்டரும் தேவைப்பட்டுள்ளது. நடு இரவில் புரியாமல் தவித்தவருக்கு பூஜா அக்னிஹோத்ரி என்பவரின் கைப்பேசி எண் கிடைத்துள்ளது.
அதில் உதவி கேட்டவருக்கு அடுத்த இரண்டு மணி நேரத்தில் விடியற்காலை 3.00 மணிக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வீட்டு வாசலில் கிடைத்தது. இதை கவிதாவிற்கு போன் செய்து உறுதி செய்து கொண்ட பூஜா, தந்தையை மருத்துவமனையில் சேர்த்து விடும்படியும் அறிவுறுத்தி உள்ளார்.
» கோவிஷீல்டு தடுப்பூசி; இரண்டு டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரமாக மாற்றம்: நிபுணர் குழு பரிந்துரை
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின் ஜோஷி குணமாகி விட கவிதா தனக்கு கிடைத்த உதவியை சுருக்கமாக ட்வீட் செய்து நன்றி தெரிவித்திருந்தார். அதன் பிறகு தான் பூஜா உ.பி.யின் தலைநகரான லக்னோவின் முன்னாள் உதவி ஆட்சியரான இவர், உ.பி. மாநில நகர்புற வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் எனத் தெரிந்துள்ளது.
தான் ஒரு அரசு அதிகாரி என்பதை கூறாமலேயே பூஜா, தனிப்பட்ட முறையில் நண்பர்களுடன் ஒரு வாட்ஸ் அப் குழு அமைத்து உதவி வருகிறார். இக்குழுவுனர், தங்கள் உதவி உரியவருக்கு சேர்ந்து பலன் கிடைத்ததா? என்பதையும் அவர்களிடம் தொடர்ந்து பேசி உறுதிபடுத்திக் கொள்கின்றனர்.
அதிகாரி பூஜாவின் குழுவில் காவல்துறையின் அரசு அதிகாரிகளான லக்னோ வடக்கு பகுதி மாவட்டக் காவல்துறை ஏஎஸ்பியான பூர்னேந்துசிங், மீரட்டின் ஏஎஸ்பியான பிரீத்தி தீக்ஷித் மற்றும் மத்தியபிரதேசத்தின் ஏஎஸ்பியான ஜபல்பூர் தேவேந்திர்சிங் ராஜ்பத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் நண்பர்களான தொழில் அதிபர் அபிஷேக் சுக்லா, ஆடிட்டர் ஜோதிசனாசிங், தனியார் நிறுவன அலுவலரான ராஜீவ்சிங் மற்றும் மூன்று மருத்துவர்களும் உள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் உயர் அதிகாரி பூஜா அக்னிஹோத்ரி கூறும்போது, ‘எங்களது பணிக்கும் இந்த சேவைக்கும் தொடர்பில்லை.
எங்கள் நட்புவளையத்தின் உதவியால் இந்த சேவையை அமைதியாக செய்து வருகிறோம். சங்கடமான சூழலில் சாக்கு, போக்கு சொல்லாமல் அனைவருக்கும் முடிந்தவரை நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு உதவுவதே இக்குழுவின் தாரக மந்திரம்.’ எனத் தெரிவித்தார்.
இக்குழுவின் உதவியால் அருகிலுள்ள மத்தியபிரதேச மாநிலத்தில் கரோனா பாதித்தவருக்கும் உதவிகள் செய்யப்படுகிறது. மார்ச் இறுதியில் துவக்கப்பட்ட இக்குழுவில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலனடைந்துள்ளனர்.
உதவி கேட்பவர்கள் ஏழையா? பணக்காரர்களா? என எதையும் கேட்காமல் உதவப்படுகிறது. இதில், மருந்து, ஆக்ஸிஜன் உள்ளிட்டவைக்கு பூஜாவின் குழுவினர் பணமும் கேட்பதில்லை. இதன் செலவிற்காக அக்குழுவினரே தம் சொந்த பணத்தில் செலவு செய்கின்றனர்.
இவர்களிடம் உதவி பெற்ற பலருக்கும் கூட அவர்கள் உ.பி. அரசின் ஐஏஎஸ், ஐபிஎஸ் இளம் உயர் அதிகாரிகளும் இடம்பெற்றிருப்பதும் தெரியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பை கோவிஷீல்டு தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பயனாளிகள், தடுப்பூசிகளை வழங்குபவர்கள் போன்றவர்களுக்கு தெரிவிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் அறிவுறுத்துமாறும் மத்திய சுகாதாரச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago