கரோனா; சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக குறைகிறது

By செய்திப்பிரிவு

தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தியாவில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்தியாவில் தற்போது கோவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,04,099 ஆக சரிந்துள்ளது. இது நாட்டின் மொத்த மதிப்பில் 15.87 சதவீதமாகும்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11,122 பாதிப்புகள் குறைவாக பதிவாகியுள்ளது.

தற்போதைய பாதிப்பில் 82.51 சதவீதம், 13 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது. கோவிட் தொற்றிலிருந்து நம் நாட்டில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,93,82,642 ஆக பதிவாகியுள்ளது. தேசிய அளவில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைவோர் வீதம் 83.04 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,55,338 பேர் குணமடைந்துள்ளனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய பாதிப்புகளை விட புதிதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தேசிய உயிரிழப்பு வீதம், தற்போது 1.09 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,205 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் 73.17 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 793 பேரும், அதை தொடர்ந்து கர்நாடகாவில் 480 பேரும் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்