ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து தினமும் செம்மரங்கள் வெட்டி பிற மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் கடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், வனத்துறை மற்றும் காவல் துறையினரை உள்ளடக் கிய அதிரடிப்படையை ஆந்திர அரசு அமைத்துள்ளது.
அந்த வகையில் செம்மரம் கடத்த முயன்றதாகக் கூறி தமிழகத் தைச் சேர்ந்த 20 கூலி தொழி லாளர்களை ஆந்திர அதிரடிப் படை போலீஸார் இந்த ஆண்டு சுட்டுக் கொன்றனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கூலி தொழிலாளர் களை ஏவி விடும் கடத்தல்காரர் களை கைது செய்யும் நடவடிக் கையில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதில் சினிமா நடிகர், நடிகை கள், தயாரிப்பாளர்கள், அரசியல் வாதிகள், போலீஸார், வனத்துறை யினர், வெளிநாட்டு கடத்தல் கும்பல் என பல தரப்பட்டவர்கள் சிக்கி வருகின்றனர். இவர்களிடம் இருந்து பல கோடி மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிரடிப்படை சார்பில் ஆந்திர அரசுக்கு செம்மரம் கடத்தல் தொடர்பாக நேற்று ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பவதாவது:
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து வெட்டி கடத்தப்பட்ட 73.39 டன் செம்மரங்கள் இந்த 2015-ம் ஆண்டில் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. இது தொடர்பாக 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 496 உள்ளூர் கடத்தல்காரர்களை யும், 9 வெளிநாட்டு கடத்தல்காரர் களையும் கைது செய்துள்ளோம். 73 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளோம்.
கடந்த 15 ஆண்டுகளில் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புள்ள செம் மரங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன. கடந்த 2011-14 இடைப் பட்ட காலத்தில் ரூ.3,300கோடி செம் மரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago