புதுச்சேரியில் வீட்டுக்கு வீடு குடிநீர் வசதி: ஜல்ஜீவன் திட்டத்தில்  சாதனை

By செய்திப்பிரிவு

வீட்டுக்கு வீடு குடிநீர் குழாய் இணைப்பு இருக்கும் யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது.

இதுகுறித்து ஜல்ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
இதன் மூலம் கோவா, தெலங்கானா, மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளுக்கு அடுத்தபடியாக, ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் குடிநீர் குழாய் இருக்கும் 4வது மாநிலம்/யூனியன் பிரதேசமாக புதுச்சேரி மாறியுள்ளது.

கோவிட்-19 தொற்று சவால்களுக்கு இடையிலும், மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, ஜல் ஜீவன் திட்டம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டுக்குள், அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதுதான் இத்திட்டத்தின் இலக்கு.

புதுச்சேரியில் ஜல் ஜீவன் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதால் பொது குழாய்களில் கூட்டத்தை தவிர்த்து சமூக இடைவெளியை பராமரிக்க முடியும். சட்டப்பேரவை தேர்தல் காரணமாக, இந்த சாதனை தாமதமானாலும், புதுச்சேரி நிர்வாகத்தின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

புதுச்சேரியில் உள்ள 1.16 லட்சம் கிராம வீடுகளில் தற்போது குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. இலக்கு காலத்துக்கு முன்பே, வீட்டுக்கு வீடு குழாய் இணைப்பு அந்தஸ்தை புதுச்சேரி சாதித்துள்ளது.

புதுச்சேரி தற்போது, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திகரிக்க திட்டமிட்டு வருகிறது. நீர்வள நிலைத்தன்மையை நோக்கி புதுச்சேரி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இவ்வாறு ஜல்ஜீவன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்