சர்ச்சைக்குரிய கருத்தடை ஊசி: இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு

By ஆர்.ஷபிமுன்னா

பெண்களால் பயன்படுத்தப்படும் டிஎம்பிஏ எனப்படும் கருத்தடை ஊசி மருந்து பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஊசி மருந்தை தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு முதல் இலவசமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பெண்களுக்கான கருத்தடை முறைகளுள் ஒன்றாக, டிஎம்பிஏ (Depot med-roxyprogesterone acetate) எனும் ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இம்மருந்து தனியார் மருத்துவர் களால் பரிந்துரைக்கப்பட்டு நாடு முழுவதிலும் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஊசியைப் போட்டுக் கொள்ளும் பெண்களுக்கு மூன்று மாதம் கருத்தரிக்காது.

இந்த ஊசியை தேசிய குடும்பக் கட்டுப்பாடு மையங்களில் இலவசமாக விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்தபோது மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இம்மருந்தை பல ஆண்டுகள் தொடர்ந்து பயன்படுத்தினால், மூட்டு வலி உட்பட வேறு பல புதிய உடல் உபாதைகள் வரும் எனக் காரணம் கூறப்பட்டது.

இருப்பினும், அரசு மருத்துவமனைகளில் விநியோகிக் கும் மருந்துகளை பரிந்துரைக்கும் முக்கிய அமைப்பான மருந்து தொழில்நுட்ப ஆலோசனை வாரியம், டிஎம்பிஏ கருத்தடை ஊசியை விநியோகிக்கலாம் என கடந்த ஆகஸ்ட் மாதம் பரிந்துரை செய்தது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பின் பரிந்துரையைத் தொடர்ந்து, பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பின், இம்மருந்தை வரும் ஏப்ரல் முதல் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் விநியோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “கரு முட்டைகள் உருவாவதை 99.9 சதவீதம் இம்மருந்து தடுக்கிறது. மகப்பேறு மருத்துவர்களின் கூட்டமைப்பும் இதைப்பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.

ஏற்கெனவே சந்தைகளில் விற்கப்படும் இந்த ஊசியின் பலன் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதனால் ஏற்படும் உபாதைகளை கண்காணித்து மருத்துவ ஆலோசனை வழங்கும் வகையில், முதல் கட்டமாக, மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மாவட்ட அரசு மருத்துவமனை களில் மட்டும் விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

இந்த கருத்தடை ஊசிக்கு எதிர்ப்பு இருப்பதால், பயன்படுத்துவது கட்டாயம் இல்லை; அரசு சார்பில் கிடைத்து வரும் கருத்தடை வசதிகளுள் இதையும் ஒன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அரசு சார்பில், ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை, பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் மற்றும் பெண்களுக்கான காப்பர் டி ஆகிய 5 கருத்தடை உபகரணங்கள் அல்லது வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்