விரைவாக 17 கோடி கோவிட் தடுப்பூசிகளை செலுத்தி உலகளவில்  இந்தியா சாதனை

By செய்திப்பிரிவு

நம் நாட்டில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளது.

உலகளவில் 17 கோடி தடுப்பூசிகளை விரைவாக (114 நாட்களில்) வழங்கிய நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. 119 நாட்களில் சீனாவும், 115 நாட்களில் அமெரிக்காவும் இந்தக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையை அடைந்தன.

கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச சமூகம் அளித்துவரும் உதவிகளில், தங்களது உள்கட்டமைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இதுவரை 6,738 பிராணவாயு செறிவூட்டிகள், 3,856 பிராணவாயு சிலிண்டர்கள், 16 பிராணவாயு உற்பத்திக் கருவிகள், 4,668 செயற்கை சுவாசக் கருவிகள் மற்றும் சுமார் 3 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை மத்திய அரசு விநியோகித்துள்ளது.

இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட அறிக்கையின்படி 24,70,799 முகாம்களில் 17,01,76,603 தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகம் (14,153) உள்ளிட்ட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18-44 வயதில் மொத்தம் 20,31,854 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 6.8 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

தடுப்பூசித் திட்டத்தின் 114-வது நாளன்று (மே 9, 2021) 6,89,652 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

கோவிட் தொற்றிலிருந்து இந்தியாவில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 1,86,71,222 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,53,818 பேர் குணமடைந்தனர். இவர்களில் 74.38 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 10 நாட்களில் தினசரி குணமடைந்தவர்களின் சராசரி எண்ணிக்கை 3.28 லட்சமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 3,66,161 புதிய பாதிப்புகள் நாட்டில் பதிவாகியுள்ளது. இதில் 73.91 சதவீதம், 10 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 48,401 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 47,930 பேரும், கேரளாவில் 35,801 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 37,45,237 ஆக அதிகரித்துள்ளது. இதில் 82.89 சதவீதம், 13 மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

தேசிய உயிரிழப்பு வீதம், 1.09 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,754 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 72.86 சதவீதத்தினர், 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்