கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நம் நாட்டுக்கு வெளிநாடுகள் உதவிக்கரம் நீட்ட பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியே காரணம் என மத்திய இணையமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் மத்திய இணையமைச்சருமான அனுராக் தாகுர் நேற்று கூறியதாவது:
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி எடுத்து வருகிறார். கரோனா முதல் அலை தாக்கத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளுக்கு இந்திய அரசு உதவி செய்தது.
இப்போது கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நம் நாட்டுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர். பிரதமர் மோடியின் முயற்சியே இதற்குக் காரணம். இந்த நெருக்கடியான நேரத்தில் ராகுல் காந்தி அரசியல் செய்ய விரும்பினால் அவர் அதைச் செய்யட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago