வெகு உயரத்தில் செல்லும் ட்ரோன்கள் மூலம் தடுப்பூசிகளை விநியோகிக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள தெலங்கானா அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தடுப்பூசிகளின் விநியோகத்துக்கு, பார்வையில் படக்கூடிய தொலைவிற்கு அப்பால் செல்லும் ட்ரோன்களைப் பயன்படுத்தி பரிசோதனை மேற்கொள்வதற்கு தெலங்கானா அரசுக்கு நிபந்தனையுன் கூடிய விலக்கை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குநரகம் ஆகியவை வழங்கியுள்ளன.
கோவிட்-19க்கு தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சிக்கு, ஆளில்லா விமானங்கள் விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் செல்லும் (VLOS) ட்ரோன்களை பயன்படுத்தி, கோவிட்-19 தடுப்பூசிகளை விநியோகிக்கும் பரிசோதனையை மேற்கொள்ள தெலங்கானா அரசுக்கு கடந்த மாதம் அனுமதி வழங்கப்பட்டது. ட்ரோன் பயன்பாடுகளை அதிகரிப்பதற்காக, கண்ணுக்கு எட்டாத உயரத்தில் (BVLOS) செல்லும் ட்ரோன்களைப் பரிசோதிப்பதற்கும் இந்த அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனைகள் இம்மாத இறுதியில் தொடங்கலாம்.
» இந்தியாவில் தினசரி கரோனா தொற்று 4,01,078; பலி எண்ணிக்கை 4,187
» தமிழகத்துக்கு 2,05,000 ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு: மத்திய அரசு தகவல்
இந்த விலக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள நிபந்தனைகள், விமானப் போக்குவரத்துத் துறை பிறப்பித்த உத்தரவுகள்/ விலக்குகள் அல்லது இனிமேல் வழங்கப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இந்த விலக்கு, நிலையான செயல்பாட்டு விதிமுறை (எஸ்ஓபி) வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டுக்கு அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இதில் எது முன்போ அது வரை செல்லுபடியாகும்.
இம்மாதத் தொடக்கத்தில், பார்வைக்கு எட்டாத உயரத்தில் செல்லும் ட்ரோன்களைப் பரிசோதனை செய்ய 20 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்தப் பரிசோதனைகள், ட்ரோன்கள் மூலமான டெலிவரி மற்றும் இதர முக்கியமான பயன்பாடுகளுக்கான ஒழுங்குமுறையை உருவாக்க உதவும்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago