2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: மாநிலங்களுக்கு ரயில்வே விநியோகம்

By செய்திப்பிரிவு

161 டேங்கர்களில் 2511 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் விநியோகித்தன.

அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 2511 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 161 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

40 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது வரை 2511 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான திரவ மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது- மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (689 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (190 மெட்ரிக் டன்), தில்லி (1053 மெட்ரிக் டன்), ஹரியாணா (259 மெட்ரிக் டன்) மற்றும் தெலங்கானா (123 மெட்ரிக் டன்).

தற்சமயம் 22 டேங்கர்களில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் 400 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியை விரைவில் சென்றடையும். மிகவும் துடிப்பான முறையில் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு, தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்