ஆக்சிஜன் நிரப்பப்பட்ட 306 டேங்கர்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பியது ஒடிசா

By செய்திப்பிரிவு

கரோனவின் இரண்டாம் அலை காரணமாக சுகாதார ரீதியாக இந்தியா கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை நீடிக்கிறது. இந்த நிலையில் ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்களை இந்தியாவின் பல்வேறு மா நிலங்களுக்கு ஒடிசா அரசு அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஒடிசா போலீஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ ஒடிசாவின் ரூர்கேலா, ஜெய்பூர், தென்கனல், மற்றும் அங்கல் ஆகியபகுதிகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்பட்ட 306 டேங்கர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த டேங்கர்கள் தெலங்கானா, ராஜஸ்தான், தமிழ் நாடு, ஹரியாணா, மகாராஷ்டிரா,உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கேரளா, டெல்லி , பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு சென்றடைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3.82 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை கரோனாவிலிருந்து 1.6 கோடிக்கும் அதிகமான நபர்கள் குணமடைந்துள்ளனர்.

தற்போது 34 லட்சத்துக்கு அதிகமானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3,780 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,26,188 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை மொத்தம் 15 கோடிக்கும் மேல் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்