தடுப்பூசி காரணமாக பிரிட்டனில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2,000க்குக் கீழ் குறைந்துள்ளது.
இதுகுறித்து வோல்டோ மீட்டர் இணையப் பக்கம் வெளியிட்ட தகவலில், “பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 1,946 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகி உள்ளனர். பிரிட்டனில் 23% பேருக்கு முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருந்த கரோனா பாதிப்பு ஏப்ரல் மாதத்தில் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இதுவரை 48%க்கும் அதிகமானவர்களுக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கடந்த சில வாரங்களாக 2,000க்கும் குறைவானவர்களே தினசரி கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து பிரிட்டன் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.
» தமிழகத்திற்கு 71,03,950 கரோனா தடுப்பூசி; 8.83 சதவீதம் வீணானது
» ‘என்னடி முனியம்மா’ பாடல் மூலம் பிரபலமான நடிகர் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்
உலக அளவில் கரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதில் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், சிலி ஆகிய நாடுகள் முன்னிலை வகுத்து வருகின்றன.
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago