அன்ன யோஜனா திட்டம்: கூடுதல் உணவு தானியம் ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

By செய்திப்பிரிவு

பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம்: தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட பயனாளிகளுக்கு கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கீழ்க்காணும் முடிவுகளுக்கு பின்னேற்பு ஒப்புதலை அளித்துள்ளது:

தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக பயன்பெறும் சுமார் 79.88 கோடி பயனாளிகளுக்கு, மே, ஜூன் ஆகிய இரண்டு மாத காலத்திற்கு, நபருக்கு மாதம் ஒன்றுக்கு ஐந்து கிலோ வீதம், உணவு தானியங்களை அளிப்பதற்காக, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூன்றாவது கட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியங்கள் ஒதுக்கீடு.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், தற்போதைய ஒதுக்கீட்டு விகிதத்தின் அடிப்படையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியான, கோதுமை/அரிசி ஒதுக்கீட்டு அளவை மத்திய உணவு பொது விநியோகத்துறை தீர்மானிக்கும்.

மேலும், உள்ளூர் பொது முடக்க சூழல்கள், மோசமான வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பிரதமர் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் உணவு தானியங்களை அனுப்பும்/ விநியோகிக்கும் கால அளவை நீட்டிப்பது குறித்தும் இந்தத் துறை முடிவெடுக்கும்.
ஒதுக்கப்பட உள்ள உணவு தானியங்களின் உத்தேச அளவு 80 லட்சம் மெட்ரிக் டன்.
கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ள உணவு தானியத்தை இலவசமாக விநியோகிப்பதன் மூலம் சுமார் 79.88 கோடி தனிநபர்கள் பயன் பெறுவர். இதன் மூலம் ரூ.25332.92 கோடி உணவு மானியம் அளிக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்