ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இந்தநிலையில் கரோனா பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத், நேரு உயிரியல் பூங்காவில் உள்ள 8 சிங்கங்களுக்கு சுவாசப் பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அந்த சிங்கங்களுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 24ம் தேதி அன்று சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிங்கங்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி படுத்தப்பட்டதாக இந்த பரிசோதனையை மேற்கொண்ட சிசிஎம்பி-லாகோன்ஸ் மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த தொற்று மாறுபட்ட வகை கரோனா அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் பாதிப்புக்கு உள்ளான 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. அவை வேகமாக குணமடைந்து வருகின்றன.
தற்போது அவை இயல்பாக நடமாடி, உணவு உண்பதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரியல் பூங்காவில் தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கெனவே அமலில் உள்ளன. தொற்று பாதிப்பை குறைப்பதற்காக உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டுள்ளது.
கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ளதால், உயிரியல் பூங்காக்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், அனைத்து உயிரியல் பூங்காக்களுக்கும் வழங்கியுள்ளது.
கரோனா பரவியது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டும் இதேபோல் உலகின் பல இடங்களில் உள்ள உயிரியல் பூங்காங்களில் விலங்குகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் விலங்குகளில் இருந்து இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்பதற்கு எந்த உண்மையான ஆதாரமும் இல்லை.
ஊழியர்களிடம் இருந்து கரோனா பரவியிருக்க வாய்ப்புள்ளதா என விசாரணை நடைபெறுகிறது. மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவுமா என்பது பற்றி விலங்குகள் நலத்துறை ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
20 mins ago
இந்தியா
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago