1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன்: கொண்டு சேர்த்த 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

By செய்திப்பிரிவு

76 டேங்கர்களில் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

பல்வேறு தடைகளை தாண்டி புதிய தீர்வுகளை கண்டறிந்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு திரவ மருத்துவ பிராணவாயுவை இந்திய ரயில்வே கொண்டு சேர்த்து வருகிறது.
இதுவரை 76 டேங்கர்களில் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

20 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏற்கெனவே பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், 27 டேங்கர்களில் சுமார் 422 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் கூடுதலாக 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கோரிக்கையை முன்வைத்துள்ள மாநிலங்களுக்குக் குறுகிய காலத்தில் இயன்ற அளவு அதிக திரவ மருத்துவ ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதில் இந்திய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.
துர்காபூரிலிருந்து 120 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனுடன் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், மே 4-ஆம் தேதி அங்கு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அங்குலிலிருந்து இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் 60.23 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் ஆக்சிஜன் தெலங்கானாவிற்குக் கிடைக்கும். சுமார் 72 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனுடன் நான்கு மற்றும் ஐந்தாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஒரிசா மாநிலத்தின் அங்குல், ரூர்கேலாவிலிருந்து ஹரியாணாவிற்குக் புறப்படும்.

422.08 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் ஆக்சிஜனுடன் கூடுதலாக 7 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, தில்லி மற்றும் ஹரியானாவிற்கு பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை சுமார் 1125 மெட்ரிக் டன் திரவ மருத்துவப்ஆக்சிஜனை மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (430.51 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (156.96 மெட்ரிக் டன்), தில்லி (190 மெட்ரிக் டன்), ஹரியாணா (109.71 மெட்ரிக் டன்), தெலங்கானா (63.6 மெட்ரிக் டன்) ஆகிய மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே அனுப்பியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்