நாட்டில் பெருகிவரும் கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மனித வளங்களின் தேவை அதிகரித்திருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோவிட் பணியில் ஈடுபடும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
நீட் முதுகலை தேர்வை குறைந்தபட்சம் நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதி இத்தேர்வு நடைபெறாது. மாணவர்களின் நலன் கருதி, அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மாத காலம் கழித்தே தேர்வு நடைபெறும்.
இதன் மூலம் கோவிட் சிகிச்சையில் பணியாற்றுவதற்கான தகுதிவாய்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் கொவிட் மேலாண்மையில் மருத்துவ உள்ளுறைவாளர்களை, உள்ளிருப்பு பயிற்சியில் சுழற்சி முறையில் நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டது. தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், ஆசிரியர்களின் முறையான பயிற்சி மற்றும் கண்காணிப்பின் கீழ் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் படிக்கும் மாணவர்கள் பயன்படுத்தப்படலாம்.
இதன் மூலம் தற்போது கோவிட் சிகிச்சையை வழங்கிவரும் மருத்துவர்களின் கூடுதல் பணிச்சுமை குறைக்கப்பட்டு, வகைப்படுத்தும் நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படும். புதிய மாணவர்கள் குழு இணையும் வரை, முதுகலை மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரப்படலாம்.
இளங்கலை/ பொது செவிலியர் மற்றும் தாதியர் பயிற்சியில் தேர்ச்சிப் பெற்ற செவிலியர்கள், மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கண்காணிப்பின் கீழ் முழுநேர கொவிட் செவிலியர்களாக பணியாற்றக் கூடும்.
» கரோனா தொற்றினால் மிதமான பாதிப்பு என்றால் சிடி ஸ்கேன் தேவையில்லை: எய்ம்ஸ்
» 3-வது முறை: மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி மே 5-ம் தேதி பதவியேற்பு
கோவிட் மேலாண்மையில் சேவைகளை புரிந்த தனி நபர்கள் குறைந்தபட்சம் 100 நாட்கள் கொவிட் சிகிச்சை பணியை நிறைவு செய்த பிறகு எதிர்வரும் முறையான அரசு பணியமர்த்துதலில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கோவிட் சம்பந்தமான பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்கள் /தொழில் நிபுணர்களுக்கு தகுந்த தடுப்பூசி போடப்படும். இதுபோன்று பணியமர்த்தப்படும் அனைத்து மருத்துவ பணியாளர்களும், கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கான அரசின் காப்பீட்டுத் திட்டத்தால் பயனடைவார்கள்.
100 நாள் கோவிட் பணியில் இணையும் அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும், குறிப்பிட்ட காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு பிரதமரின் மதிப்புமிக்க கோவிட் தேசிய சேவை விருது இந்திய அரசால் வழங்கப்படும்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அதை சார்ந்த துறையினர், கோவிட் மேலாண்மையின் முதுகெலும்பாக செயல்படுவதுடன், முன்கள பணியாளர்களாகவும் விளங்குகின்றனர். நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்குவது அவர்களது எண்ணிக்கையை கணிசமாக அதிகரிப்பது அவசியமாகிறது. மருத்துவ சமூகத்தின் சீரான பணியும் ஆழ்ந்த அர்ப்பணிப்பும் கவனத்தில் கொள்ளப்பட்டது.
மருத்துவர்கள் செவிலியர்களை கோவிட் பணியில் அமர்த்துவதற்கான வழிமுறைகளை 2020 ஜூன் 16 அன்று மத்திய அரசு வெளியிட்டது. கோவிட் மேலாண்மைக்கான வசதிகள் மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கு பொது மருத்துவ அவசர கால ஆதரவாக ரூ. 15,000 கோடியை மத்திய அரசு வழங்கியது. தேசிய சுகாதார இயக்கத்தின் வாயிலாக கூடுதலாக 2206 நிபுணர்கள், 4685 மருத்துவ அதிகாரிகள் மற்றும் 25,593 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
முக்கிய முடிவுகளின் விரிவான விபரங்கள் பின்வருமாறு:
1. தளர்வுகள்/வசதிகள் நீட்டிப்புகள்:
நீட் முதுகலை தேர்வுகளை குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு தள்ளிவைப்பு: கோவிட் 19 பெருந்தொற்றின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு நீட் (முதுகலை) 2021 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்கு முன்பாக இந்தத் தேர்வு நடத்தப்படாது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் கழித்தே தேர்வு நடைபெறும்.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கூடிய மாணவர்களை மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தொடர்புகொண்டு கோவிட் -19 பணியில் அவர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். இந்த எம்பிபிஎஸ் மருத்துவர்களின் சேவையை கோவிட் -19 மேலாண்மையில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆசிரியர்களின் கண்காணிப்பின் கீழ் கொவிட் மேலாண்மையில் மருத்துவ உள்ளுறைவாளர்களை, உள்ளிருப்பு பயிற்சியின் சுழற்சி முறையில் மாநில/ யூனியன் பிரதேச அரசுகள் தற்போது நியமிக்கலாம் .
தொலை மருத்துவ சேவை மற்றும் லேசான கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில், ஆசிரியர்களின் முறையான பயிற்சி மற்றும் கண்காணிப்பின் கீழ் இறுதி ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்கள் பயன்படுத்தப்படலாம்.
முதுகலை இறுதியாண்டு மாணவர்களின் சேவை நீட்டிப்பு: முதுகலை மாணவர்களின் புதிய குழு இணையும் வரை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களின் மருத்துவ சேவை (பொதுவான மற்றும் சிறப்பு தனித்தன்மை வாய்ந்த) தொடரலாம். அதேபோல புதியவர்கள் நியமிக்கப்படும் வரை மூத்த மருத்துவர்கள்/ பதிவாளர்களின் சேவைகளையும் தொடரலாம்.
செவிலியர்கள்: மூத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கண்காணிப்பின் கீழ் இளங்கலை/ பொது செவிலியர்கள் மற்றும் தாதியர் பயிற்சி பெறும் செவிலியர்களை அவசரகால மருத்துவ பிரிவு உள்ளிட்ட பணிகளில் முழு நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட செவிலிய அதிகாரிகளான முதுகலை செவிலிய மாணவர்கள், போஸ்ட் பேசிக் இளங்கலை (செவிலியர்) மற்றும் போஸ்ட் பேசிக் டிப்ளமோ செவிலியர் மாணவர்களின் சேவையை மருத்துவமனையின் நெறிமுறைகள்/ கொள்கைகளின் அடிப்படையில் கோவிட் - 19 நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இறுதியாண்டு தேர்வுகளை எதிர்நோக்கியுள்ள செவிலியர்கள் மற்றும் தாதியர் பயிற்சி அல்லது இளங்கலை (செவிலியர்கள்) இறுதி ஆண்டு மாணவர்கள் பல்வேறு அரசு தனியார் மருத்துவமனைகளில் மூத்த ஆசிரியரின் கண்காணிப்பின் கீழ் முழுநேர கோவிட் செவிலியராக பணியாற்றலாம்.
மருத்துவம் சார்ந்த படிப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்களது பயிற்சி மற்றும் சான்றிதழை அடிப்படையாகக்கொண்டு, கொவிட் மேலாண்மையில் அவர்களது சேவையை பயன்படுத்தலாம்.
இவ்வாறு அதிகரிக்கப்பட்ட மனிதவளம், கோவிட் மேலாண்மையில் மட்டுமே பயன்படுத்தப்படும்.
2. ஊக்கத் தொகைகள்/ சேவைக்கான அங்கீகாரம்
கோவிட் மேலாண்மையில் சேவைகளை வழங்கிய தனி நபர்கள் குறைந்தபட்சம் 100 நாட்கள் கோவிட் சிகிச்சை பணியை நிறைவு செய்த பிறகு எதிர்வரும் முறையான அரசு பணியமர்த்துதலில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேல் குறிப்பிட்ட கூடுதல் மனித சக்தியை ஈடுபடுத்துவதில் தேசிய சுகாதார இயக்கத்தின் மனிதவள ஒப்பந்தத்திற்கான வழிமுறைகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் பின்பற்றலாம். இந்த வழிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதியம் குறித்த முடிவை மாநிலங்கள் மாற்றி இறுதி செய்துகொள்ளலாம். கொவிட் சேவையில் ஈடுபட்டதற்கான தக்க வெகுமானமும் வழங்கப்படலாம்.
கோவிட் சம்பந்தமான பணியில் ஈடுபடும் மருத்துவ மாணவர்கள் /தொழில் நிபுணர்களுக்கு தகுந்த தடுப்பூசி போடப்படும். இதுபோன்று பணியமர்த்தப்படும் அனைத்து மருத்துவ பணியாளர்களும், கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவ ஊழியர்களுக்கான அரசின் காப்பீட்டு திட்டத்தால் பயனடைவார்கள்.
100 நாள் கோவிட் பணியில் இணையும் அனைத்து தொழில் வல்லுநர்களுக்கும், குறிப்பிட்ட காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு பிரதமரின் மதிப்புமிக்க கோவிட் தேசிய சேவை விருது இந்திய அரசால் வழங்கப்படும்.
இது போன்ற வழிமுறைகளில் பணியமர்த்தப்படும் கூடுதல் மருத்துவ பணியாளர்களின் சேவையை தனியார் கோவிட் மருத்துவமனைகளிலும், பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் மாநில அரசுகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள், இத்துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகளின் இதர மருத்துவ பணியாளர்களுக்கான இடங்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் 45 நாட்களுக்குள் ஒப்பந்தத்தின் பெயரில் விரைந்து நிரப்பப்பட வேண்டும்.
மனித சக்தியின் எண்ணிக்கையை அதிகரிக்க மேலே குறிப்பிடப்பட்ட ஊக்கத் தொகைகளை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago