இந்தியாவில் கரோனா பாதிப்பு தினமும் 3 லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கையில், தடுப்பூசி தட்டுப்பாடு சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18 - 44 வயதினருக்கு மேம் 1ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நிலையில் 18 -44 வயதினருக்குத் தேவையான தடுப்பூசிகள் இன்னும் தங்களிடம் வந்தடையவில்லை என்று தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கிறது.
அதேவேளையில் தனியார் மருத்துவமனைகள், 18 -44 வயதினருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்படும் என்று அறிவித்துள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஆதார் பூனவல்லா கூறும்போது, “இந்தியாவில் சில மாதங்களுக்கு கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும். ஜூலை மாதம் முதல் தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறோம். ஜூலை மாதத்தில் 100 மில்லியன் வரை தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago