மேற்கு வங்கத்தில் தொடர்ந்து எங்கள் சித்தாந்தத்தை பரப்புவோம்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உறுதி

By பிடிஐ


மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்களின் கடினமான உழைப்பால், பிரதான எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. தொடர்ந்த எங்கள் கருத்துக்களையும், சித்தாந்தங்களையும் பரப்புவோம் என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 213 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. பாஜக 77 இடங்களில் மட்டுமே வென்றது.

இந்த தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தெரிவித்த நிலையில் 100 இடங்களில்கூட வெல்லவில்லை.

தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:

மேற்கு வங்க மக்கள் அளித்த தீர்ப்பை மரியாதையுடன் ஏற்கிறோம், எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். குறிப்பாக பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ்க்கும், அவரின் கடின உழைப்புக்கும் நன்றி.

தங்க வங்காளம் என்ற கனவு நனவாக தொடர்ந்து பாஜக உழைக்கும். பாஜக தனது சித்தாந்தத்தை மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு சேர்க்கும். இது பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி, பிரதான எதிர்க்கட்சியாக பாஜக முன்னேறியுள்ளது.

அசாம், புதுச்சேரி, தமிழகம், கேரளாவிலும் பாஜக மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்