பிரான்ஸ் அரசு அனுப்பிய 28 டன் மருத்துவ கருவிகள் இந்தியா வந்து சேர்ந்தது

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று நோயாளிகளுக்கு உதவ 28 டன் எடையுள்ள மருத்துவக் கருவிகள், மருந்துகளுடன் பிரான்ஸ் அனுப்பிய விமானம் நேற்று டெல்லி வந்து சேர்ந்தது.

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் இருக்கும் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவுக்கு8 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்,5 திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள், 28 செயற்கை சுவாசக் கருவிகள்,200 மின்சார சிரிஞ்ச் பம்புகள், மருந்துகள் ஆகியவை வழங்கப்படும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஒரு ஆக்கிஜன் ஜெனரேட்டர் மூலம் 250 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்கலாம் அல்லது அதிகம்பாதிக்கப்பட்ட 15 ஐசியு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கலாம் அல்லது சிறிதளவு ஆக்சிஜன் தேவைப்படும் 150 நோயாளிகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் மருத்துவக் கருவிகளுடன் பிரான்ஸிலிருந்து புறப்பட்ட விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது. இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் டெல்லி, ஹரியாணா, தெலங்கானாவில் உள்ளமருத்துவமனைகளில் பொருத்தப்படும் என்று தெரிகிறது.

மருத்துவமனைகளில் ஆக்சிஜன்

இதுதொடர்பாக பிரான்ஸ் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் டெல்லி, ஹரியாணா, தெலங்கானா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவப்படும். 28 டன் எடையுள்ள மருத்துவக் கருவிகளின் மதிப்பு ரூ.17கோடியாகும். இதை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டோம். அவர்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள்" என கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்