‘‘வெறுப்பு அரசியல் செய்த பாஜக; பாடம் புகட்டிய மேற்குவங்க மக்கள்’’- மம்தா பானர்ஜி ஆவேசம்

By செய்திப்பிரிவு

பாஜக மிக மோசமான வெறுப்பு அரசியல் செய்தது, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியான நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம், அதனை மீறியும் நாங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளோம் என மம்தா பானர்ஜி கூறினார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மேற்குவங்கத்தில் 8-வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் போட்டியிடுகிறார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது . நந்திகிராமில் கடந்த 2007ல் ரசாயன ஆலைக்கு எதிரான நந்திகிராம் போராட்டத்தை முன்னெடுத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜிக்கு சுவேந்து அதிகாரி கடும் சவாலாக இருந்தார்.

மேற்குவங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் வாக்கு எண்ணிக்கையில் திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை விடவும் இரண்டு மடங்கு கூடுதல் தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.

மாலை நிலவரப்படி வாக்கு எண்ணிக்கையில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களிலும், பாஜக 78 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு நாடுமுழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்த தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து பின்னர் மம்தா பானர்ஜி கூறியதாவது:

‘‘பாஜக மிக மோசமான வெறுப்பு அரசியல் செய்தது,. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியான நெருக்கடியை நாங்கள் சந்தித்தோம். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

கரோனாவுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றுவோம். கரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடக்கும்

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டது. போராட்டக்களத்தில் இருந்தேன். நந்திகிராம் மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பை ஏற்கிறேன். நாங்கள் 221 இடங்களில் வெற்றி பெறும் சூழலில் உள்ளோம். பாஜக தோற்று விட்டது’’ எனக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்