மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்த தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையத்தி்ன் அறிவிப்பின்படி 219 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருக்கிறது, பாஜக 72 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. மிகப்ெபரிய வெற்றியை நோக்கி நகர்ந்துள்ள மம்தா பானர்ஜிக்கு முக்கிய அரசியல் கட்சியின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சட்டப்பேரவைத் ேதர்தலுக்கு முன்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக முன்னாள் மூத்த தலைவரும், முன்னாள் மத்தியஅமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா இன்று பேட்டிஅளித்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவுடன் யஷ்வந்த் சின்ஹாவுக்கு துணைத் தலைவர் பதவியை மம்தா வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
» திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து போட்டியிட்ட எம்எல்ஏக்கள் பலர் தோல்வி முகம்
திரிணமூல் காங்கிரஸ் வெற்றி குறித்து யஷ்வந்த் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.மாநிலபாஜக தலைவர் திலிப் கோஷ் , பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்க்கியா ஆகியோரும் ராஜினாமா செய்ய வேண்டும்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் தாக்கம் அடுத்த ஆண்டு நடக்கும் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலிலும்,2024ம் ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.
இந்த தேர்தல் முடிவுகள் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பெற்றது மகத்தான வெற்றி என்றும், மோடியும், பாஜக தலைவர்களும் பெற்றது பொய்யான வெற்றி என்று உணர்த்துகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆட்களை இறக்கி, பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை சேர்ந்து பாஜக தலைவர்கள் தங்களுக்கு ஆதரவு இருப்பதாகக் காண்பித்தனர். பிரச்சாரத்தின் போது மம்தா பானர்ஜியை அவதூறாகப் பேசியதற்கு பாஜகவினருக்கும், பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கும் கோடிக்கணக்கான மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மம்தாவுடன்தான் நாங்கள் நிற்போம் என மக்கள் உணர்த்திவிட்டார்கள்.
மம்தா பானர்ஜியின் மக்கள் பணியைப் பார்த்து மக்கள் திருப்தி அடைந்துள்ளார்கள், மாநிலத்தில் வளர்ச்சி மனநிறைவைத் தருகிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உண்மையான மாற்றத்துக்கு வந்துள்ளதாக பாஜக தலைவர்கள் கூறினாலும், மக்களை அவர்களால் நம்பவைக்க முடியவில்லை
இவ்வாறு யஷ்வந்த் சின்ஹா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago