ஒரு சிகரெட் பற்ற வைத்ததால் 18 பேருக்கு கரோனா தொற்று

By என். மகேஷ்குமார்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகர் காலனி பகுதியில் வசிக்கும் மார்க்கெட்டிங் மேனேஜர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

ஆனால், இவர் பணிபுரியும் நிறுவனத்தில் மேலும் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதற்கு யார் காரணமென நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஊழியர்களை விசாரித்தனர். அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தது போல் மார்க்கெட்டிங் மேனேஜரால்தான் எங்களுக்கு கரோனா வந்தது என கூறினர்.

மார்க்கெட்டிங் மேனேஜரை நிர்வாகத்தார் தொடர்பு கொண்டு ‘எப்படி கரோனா வந்தது என யோசிக்க சொன்னார்கள்.

இதனால், அந்த மார்க்கெட்டிங் மேனேஜர் தனக்கு எப்படி கரோனா வந்தது என யோசனை செய்ததில், சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்ற போது, அங்கு தனக்கு நன்கு தெரிந்த ஒருவர் வந்துள்ளார். அவர் அடிக்கடி லேசாக இருமி யுள்ளார்.

அவரிடமிருந்து, புகைந்து கொண்டிருந்த சிக ரெட்டை வாங்கி, தன்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்துள்ளார் மார்க்கெட்டிங் மேனேஜர். அப்போது அவருக்கு கரோனா தொற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு சிகரெட்டை மற்றொரு நபரிடமிருந்து வாங்கி பற்ற வைத்ததால்தான் தனக்கு கரோனா வந்தது என்பதை அறிந்த மேனேஜர், இது குறித்து தன்னுடன் நெருங்கி பழகிய 17 நண்பர்களிடமும் மன்னிப்பு கோரினார்.

ஒரே நபரிடமிருந்து 17 பேருக்கு கரோனா தொற்று பரவிய விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்