கோவிட் தடுப்பூசி:  பயனாளிகளின் எண்ணிக்கை 15.5 கோடி ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான, உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தில் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 27 லட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

105-வது நாளான நேற்று (ஏப்ரல் 30, 2021), நாடு முழுவதும் 27,44,485 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை 15,49,89,635 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,56,84,406 ஆக (81.84%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,99,988 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

மற்றொரு மைல்கல் சாதனையாக, கடந்த 24 மணி நேரத்தில் 19,45,299 பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய பத்து மாநிலங்களில் மட்டும் 73.71 சதவீதம் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 62,919 பேரும், கர்நாடகாவில் 48,296 பேரும், கேரளாவில் 37,199 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்தியாவில் தற்போது 32,68,710 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 17.06 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 3,523 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்