இந்தியாவில் இதுவரையில்லாத வகையில் கரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,01,993பேர் புதிதாக கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,01,993 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 1,91,64,969 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து 1,56,84,406 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,99,988 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
» இன்று வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி: உடனடி பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை
» குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: 12 கரோனா நோயாளிகள் பலி
தற்போது 32,68,710 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 3523 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 2,11,853 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தம் 15,49,89,635பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஐசிஎம்ஆர் அறிவிப்பின்படி, இதுவரை 28,83,37,385 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 19,45,299 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago