கரோனா வைரஸுக்கு எதிராக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தற்போது சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் ஐசிஎம்ஆர் தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. 3-வதாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்துள்ளது.
ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள கரோனா வைரஸுக்கு எதிரான ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள ரெட்டிஸ் மருந்து நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்பந்தம் செய்தது. இந்தியாவில் இந்த ஸ்புட்னிக் தடுப்பூசிக்கான கிளினிக்கல் பரிசோதனையையும் ரெட்டிஸ் நிறுவனம் முடித்துவிட்டது.
அவரசத் தேவைக்காக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, முதல் கட்டமாக 1.25 கோடி தடுப்பூசிகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
» குஜராத் மருத்துவமனையில் தீ விபத்து: 12 கரோனா நோயாளிகள் பலி
» 3-வது கட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்: 2.5 கோடி பயனாளிகள் பதிவு
இந்தநிலையில் ஸ்புட்னிஸ்-வி தடுப்பூசி இன்று இந்தியா வருகிறது. மே மாதத் தொடக்கத்திலிருந்தே இந்திய மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago