கரோனா தொற்றால் உயிரிழந்த 15 ஊழியர்களின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம்: தேவஸ்தான அறங்காவலர் திட்டவட்டம்

By என். மகேஷ்குமார்

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் வைரஸ் தொற்றில் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டம் தமிழக எல்லையில் அமைந் துள்ளது. மேலும், இந்த சித்தூர் மாவட்டத்தில் தான் திருப்பதி, காளஹஸ்தி, காணிப்பாக்கம், திருச்சானூர் கோயில்கள் இருக்கின்றன. இங்கு பல மாநில பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக திருப்பதிக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 15 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து நேற்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று கூறியதாவது:

இருமல், காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்ற கரோனாஅறிகுறிகள் இருக்கும் பக்தர்கள் திருமலைக்கு வர வேண்டாம். ஏற்கெனவே 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தினமும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படு கின்றன. 15 நாட்களுக்குள் அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிடும்.

இதுவரை கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ள 15 ஊழியர்களின் குடும்பத்தாருக்கு உறுதுணையாக இருப்போம். திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் யாருக்கும் கரோனா தொற்று இல்லை. திருப்பதி, திருச்சானூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் தேவஸ்தான ஊழியர்களே தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சுப்பாரெட்டி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்