கரோனாவை தடுக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்(ஆர்எஸ்எஸ்) இறங்கியுள்ளது. இதன் சார்பில் 43 முக்கிய நகரங்களில் சேவை நிலையங்கள் துவக்கப்பட்டு, 219 நகர மருத்துவமனைகளில் அரசிற்கு உதவி வருவதாக அந்த அமைப்பின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் தெரிவித்துளார்.
இதுகுறித்து நேற்று செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் செய்தியாளர்களிடம் காணொளியில் பேசினார். அப்போது அவர், நாட்டின் பல பகுதிகளில் கரோனாவினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனால், ஆர்எஸ்எஸ் சார்பில் 43 முக்கிய நகரங்களில் கரோனாவிற்கான சேவை நிலையங்கள் துவங்கி செயல்படுவதாகவும், 219 மருத்துவமனைகளில் அதன் தொண்டர்கள் அரசிற்கு உதவுவதாகவும் தகவல் அளித்தார்.
இது குறித்து செய்தி தொடர்பாளரான சுனில் அம்பேத்கர் மேலும் கூறுகையில், ‘ஆர்எஸ்எஸ், சேவா பாரதி உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் பொதுமக்களுக்கான சேவை அனைத்து காலக்கட்டங்களிலும் அளிக்கப்படுகிறது.
» அதிகரிக்கும் கரோனா பரவல்; மாவட்டம் வாரியாக நடவடிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
» 16.16 கோடி தடுப்பூசி டோஸ்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு விநியோகம்
பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களுக்கு மருந்துகளும், நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறோம். எங்கள் தொண்டர்கள் தம் உயிரை பணயம் வைத்து இரவு, பகல் பாராமல் உதவி வருகின்றனர்.
தற்போதைய தேவைக்கு ஏற்றபடி சமூக விலகலுக்கான இடம், கோவிட் தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையம், ஆயுர்வேத மூலிகைகள் விநியோகம், ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் உள்ளிட்ட 12 வகையான சேவைகள் செய்கின்றனர்.
இந்த பிரச்சனையானக் காலகட்டத்தில் மாவட்ட அரசு நிர்வாகங்களுக்கு நமது தொண்டர்களும் பெரும் உதவி புரிகின்றனர். மற்ற நிறுவனங்களின் சேவைகளிலும் ஆர்எஸ்எஸ் உதவிக்கரம் நீட்டுகிறது.’ எனத் தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக மத்தியபிரதேசத்தின் இந்தோரில் ராதா ஸ்வாமி சத் சங் எனும் மார்க அமைப்பிற்கு செய்த உதவியை சுனில் குறிப்பிட்டார். இதில் அமைந்த 2000 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனைக்கு மற்ற அமைப்புகளுடன் இணைந்து ஆர்எஸ்எஸ் உதவுவதாகத் தெரிவித்தார்.
கரோனாவிற்கானத் தடுப்பு ஊசிகள் செலுத்தும் பணியிலும் ஆர்எஸ்எஸ் முக்கியப் பங்காற்றி வருகிறது. இது குறித்தும் செய்தி தொடர்பாளரான சுனில் விரிவானத் தகவல் அளித்தார்.
அதன்படி, நாட்டின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்களை ஆர்எஸ்எஸ் அமைத்துள்ளது. இதுவரையும் அதன் சார்பில் 2,442 தடுப்பூசி நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்மா தானம் குறித்த ஒரு கேள்விக்கும் செய்தி தொடர்பாளர் சுனில் பதிலளித்தார். அதில் அவர், புனேவில் தமது தொண்டர்களின் விழிப்புணர்வு முகாம்களால், 600 பிளாஸ்மாக்கள் தானம் அளிக்கப்பட்டு, சுமார் 1,500 உயிர்களைக் காத்ததாகவும் தெரிவித்தார்.
தம் வீடுகளில் தனியாக வாழும் வயது முதிர்ந்தோருக்காக ஆர்எஸ்எஸ் சார்பில் ஒரு சிறப்பு ‘ஹெல்ப்லைன்’ எண் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மூத்த வயதுள்ளவர்களுக்கு உதவிகள் கிடைப்பதாகவும் சுனில் அம்பேத்கர் தகவல் அளித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago