3.30 மணி நிலவரம்; மேற்கு வங்க இறுதி கட்டத் தேர்தல்: 68.46%  வாக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

மேற்குவங்க சட்டப் பேரவைக்கான 8-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3.30 மணி வரை 68.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேற்குவங்கத்தில் 7 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 8-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று இறுதிகட்ட தேர்தல் 35 தொகுதிகளில் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6.30 மணிவரை நடைபெறுகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மால்டா பாகம் 2, கொல்கத்தா வடக்கு, முர்ஷிதாபாத் பாகம் 2, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது.கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

8-ம் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3.30 மணி வரை 68.46% வாக்குகள் பதிவாகியுள்ளன.இந்த தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்