கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா மோசம்: கவுஷிக் பாசு காட்டம்

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்று உலக வங்கியின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டி வருகிறது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை 9% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிலும் முழுமையாக இரண்டு டோஸ்களைப் போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நிலையில் நாட்டின் பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசிகள் தயாரிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்துவதைப் பரவலாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து கவுஷிக் பாசு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், "சமீபத்தில் நியூயார்க் டைம்ஸில் வெளியான தரவின்படி, இந்தியாவில் வெறும் 1.7% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் சிறந்த மருந்துவர்கள், மருத்துவ நிறுவனங்கள், வெற்றிகரமான தடுப்பூசி திட்டங்கள் என்ற வரலாறு இந்தியாவில் உள்ளது. ஆனால், கரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியாவின் மோசமான செயல்திறன் அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்