கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3,000 பேர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் மூலம்தான் கரோனா பரவுகிறது என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக அமைச்சர் அஷோகா கூறும்போது, ''நாங்கள் இலவசமாக மருந்துகளை அளிக்கிறோம். இதன் மூலமே 90% மக்கள் சரியாகின்றனர். ஆனால், பெங்களூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2,000 -3,000 பேர்வரை மாயமாகி உள்ளனர். அவர்களது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலும் இல்லை. அவர்கள் எங்கு சென்றார்கள் எனத் தெரியவில்லை.
உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படும்போது இவர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாகத் தொற்று அதிகம் பரவுகிறது. இவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு போலீஸாரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
முன்னதாக, கர்நாடகாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா 14 நாட்கள் லாக்டவுனை அமல்படுத்தினார்.
கர்நாடாகவில் தினமும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago