கரோனா மருந்து ஏற்றி வரும் கப்பல்களுக்கு கட்டணம் ரத்து: அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.

இந்நிலையில், ஆக்சிஜன் அடங்கிய கன்டெய்னர்கள், ஆக் சிஜன் பாட்டில்கள், ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிப்புக்குத் தேவையான இரும்புக் குழாய்கள் உள்ளிட்டவற்றை ஏற்றி வரும் சரக்குக் கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும் என அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல கரோனா வைரஸ் தடுப்பு சார்ந்த பணிகளுக்கான கருவிகள், கிடங்குகள் உள்ளிட்டவற்றை துறைமுகத்தில் வைத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவற்றுக்கு வாடகை எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரோனா தடுப்புமருந்துகளைக் கொண்டு வரும் அனைத்து கப்பல்களுக்கும் எந்தவித துறைமுகம் சார்ந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர தாய்லாந்திலிருந்து 7 கிரையோஜெனிக் கன்டெய் னர்களை இந்நிறுவனம் வாங்கி யுள்ளது. இதில் 4 கன்டெய்னர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலம் பாங்காக்கிலிருந்து கடந்த திங்களன்று கொண்டு வரப் பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்