கரோனா இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தேசிய அளவில் கரோனா இறப்பின் சராசரி 1.13% என்றிருக்க, உத்தராகண்டில் மட்டுமே இது 1.41% என உயர்ந்துள்ளது.
இம்மாநிலத்தில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் கரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 250 என்றாகிவிட்டது. இதை கட்டுப்படுத்துவது பாஜக ஆளும் உத்தராகண்ட் அரசிற்கு பெரும் சவாலாகி உள்ளது.
சிறிய மாநிலங்களில் ஒன்றான உத்தராகண்ட் அரசின் மருத்துவநலத்துறை கரோனாவை கட்டுப்படுத்தப் பல்வேறு உத்திகளை கையாள்கிறது. எனினும், இதற்கு பெரிய அளவில் பலன் கிடைப்பதாகத் தெரியவில்லை எனக் கருதப்படுகிறது.
நாட்டின் ஜனத்தொகையில் சுமார் ஒரு சதவிகித மக்களே உத்தராகண்டில் உள்ளனர். இங்கு ஏப்ரல் மாதத்தின் கடந்த 22 இல் 34, 23 இல் 19, 24 இல் 49, 25 இல் 81 மற்றும் 26 இல் 67 மரணங்கள் கரோனாவால் நிகழ்ந்துள்ளன.
» கம்மின்ஸை தொடர்ந்து இந்தியாவுக்கு உதவிய பிரெட் லீ
» ஜூன் மாதம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் 'ஜகமே தந்திரம்': அதிகாரபூர்வ அறிவிப்பு
இம்மாநில அரசு உத்தராகண்டின் அனைத்து மாநிலங்களின் மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் வசதியுடன் 108 ஆம்புலன்ஸும் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இதில், கரோனா தொற்று சிகிச்சைக்காக எனத் தனியாக 52 மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
எனினும், கடந்த 24 மணி நேரத்தில் 96 பேர் பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இவற்றில் 5,703 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது அலையில், மாநிலத்தின் மொத்த கரோனா தொற்றாளர்கள் 43 ஆயிரமாக உயர்ந்து விட்டனர். இவர்களில் இன்று 1471 பேர் கரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த மாதம் வரை கரோனாவிலிருந்து குணமாகும் எண்ணிக்கை இங்கு 95 சதவிகிதமாக இருந்தது. இது தற்போது குறைந்து 69.96 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.
இறப்பு விகிதம் தேசிய சராசரியைவிட அதிகமாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago