மேற்கு வங்கத்தில் 7-ம் கட்ட தேர்தல்: 75 சதவீத வாக்குகள் பதிவு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் 34 தொகுதி களுக்கான 7-ம் கட்ட தேர்தலில் 75.06 சதவீத வாக்குகள் பதி வாகின.

மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதில் 6 கட்டங்களாக 223 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் முடிந்து விட்ட நிலையில், 7-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.

மால்டா, தெற்கு கொல்கத்தா, முர்ஷிதாபாத், மேற்கு பர்தமான், தெற்கு தினாஜ்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 34 தொகுதிகள் தேர்தலை எதிர்கொண்டன. மொத்தம் 12,068 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 37 பெண்கள் உட்பட 268 வேட் பாளர்கள் களத்தில் உள்ளனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்புடன் நடைபெற்றது. இந்நிலையில் 75.06 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேற்கு வங்கத்தில் 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறு கிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை வாக்குகள் எண்ணப்படுகிறது. இத்துடன் தமிழகம், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாமிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்