மேற்கு வங்கத்தில் 7-வது கட்ட தேர்தல்: காலை முதல் அமைதியான வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 7-வது கட்டமாக வாக்குப்பதிவு இனு்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 34 தொகுதிகளுக்கு 7-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும்போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்வர் மம்தா பானர்ஜி தற்போது எம்எல்ஏவாக இருக்கும் தொகுதியான பபானிபூர் தொகுதி உள்ளிட்ட தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்படுகிறது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடுமையான கரோனா விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது.

796 கம்பெனிகள் மத்திய படைகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கெனவே நடந்த தேர்தல்களில் சில இடங்களில் வன்முறைகள் ஏற்பட்டதை கருத்தில் கொண்டுபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

29-ம் தேதி 8-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்