‘‘ஆக்ஸிஜன் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும், காப்பாற்றுங்கள்’’ - அபயக்குரல் எழுப்பும் டெல்லி மருத்துவமனை  

By ஆர்.ஷபிமுன்னா

கையிருப்பில் உள்ள ஆக்ஸிஜன் இன்னும் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும் எனக் கூறி, காப்பாற்றும்படி டெல்லியின் பத்ரா மருத்துவமனை அபயக்குரல் எழுப்பியுள்ளது. இங்கு கரோனா தொற்றால் 260 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.

டெல்லியில் தனியாரால் நடைபெறுவது பத்ரா மெடிகல் ரிசர்ச் டெண்டர் மருத்துவமனை. இங்கு கரோனா தொற்றால் 260 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் குறைபாட்டிற்காக அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர்.எஸ்.சி.எல்.குப்தா டெல்லி அரசிடம் கேட்டிருந்தார். இதற்காக தன்னிடம் உள்ள இருப்பைப் பொறுத்து டெல்லி அரசு அவர்களுக்கு வெறும் 500 மெட்ரிக் லிட்டர் ஆக்ஸிஜன் இன்று காலை அனுப்பியுள்ளது.

இது மொத்தம் ஒன்றரை மணி நேரத்திற்கே வரும் எனவும், மேலும் அனுப்பிக் காப்பாற்றும்படியும் அவர் அபயக்குரல் எழுப்பியுள்ளார். இவர்களது அன்றாட ஆக்ஸிஜன் தேவை 8000 மெட்ரிக் லிட்டர் எனவும் டாக்டர் குப்தா குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை டெல்லியின் மற்றொரு தனியாரின் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினால் 25 பேர் பலியாகி உள்ளனர். இந்த சூழலில் பத்ரா மருத்துவமனையின் நோயாளிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் பின்னணியில் மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு இப்பிரச்சினையைக் கொண்டு செல்வது காரணமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்