நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகி வருகிறது.
கரோனா பரவலை தடுக்க முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் 2-வது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படுகிறது. தற்போது இளம் வயதினரை வைரஸ் அதிகமாக பாதிப்பதாக தகவல் வெளியானது. எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தினர்.
இதையடுத்து கடந்த திங்கட்கிழமை பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலை குழு ஆலோசனை நடந்தது. அந்த கூட்டத்தில் மே 1-ம் தேதி 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு 28-ம்தேதி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் ‘Co-Win’ மற்றும் cowin.gov.in ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். யாரும் முன்பதிவுக்காக நேரில் வரத் தேவையில்லை என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. அரசு தடுப்பூசி மையங்களில் அவர்களுக்கு இலவசமாக வழங் கப்படும்.
நாட்டில்s கரோனா வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி 2 கட்டமாக நடைபெற்றது. தற்போது 3-வதுகட்டமாக 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago