விரார் மருத்துவமனை தீ விபத்து: இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விரார் மருத்துவமனை தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டம், வாசி விரார் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விஜய் வல்லபா கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் உள்ள ஐசியு சிகிச்சை மையத்தில் 17 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.15 மணி அளவில் திடீரென ஐசியு மையத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, உடனடியாக தீ ஐசியு வார்டு முழுவதும் பரவியது, அதிகாலை நேரம் என்பதால், கரோனா நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் பலரும் தூக்கத்தில் இருந்தனர். தீ விபத்து ஏற்பட்டு அதைத் தடுப்பதற்குள் ஐசியு வார்டில் தீ முழுவுதும் பரவியது.

தீ விபத்து குறித்துஉடனடியாக தீயணைப்பு படையிருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியிலும்,மீட்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கரோனா நோயாளிகளில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

விராரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் நேரிட்ட உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

41 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்