கோவிட்-19 தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ், இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 13.23 கோடியைக் கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 19,28,118 முகாம்களில் 13,23,30,644 பயனாளிகளுக்கு, கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 22 லட்சம் டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
96-வது நாளான நேற்று (ஏப்ரல் 21, 2021), நாடு முழுவதும் 22,11,334 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 3,14,835 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், தில்லி, கர்நாடகா, கேரளா, சத்திஸ்கர், மத்தியப் பிரதேசம், பிகார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கொவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 75.66 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 67,468 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 33,106 பேரும், டெல்லியில் 24,638 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 22,91,428 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 14.38 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,34,54,880 ஆக (84.46%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,78,841 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,104 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய உயிரிழப்பு விகிதம் 1.16 சதவீதமாகக் குறைந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago