கரோனா நிலவரம்; முக்கிய ஆலோசனை: நாளைய மே.வங்க பிரச்சாரத்தை ரத்து செய்கிறேன்: பிரதமர் ட்வீட்

By செய்திப்பிரிவு

கரோனா நிலவரம் குறித்து நாளை உயர் மட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்கு தலைமை தாங்குவதால் மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாட்டில் நிலவும் கரோனா நிலவரம் குறித்து நாளை பல உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களை தலைமையேற்று நடத்துகிறேன். அதன் காரணமாக நாளை மேற்கு வங்கத்துக்கு செல்ல இயலாது" எனத் தெரிவித்திருக்கிறார்.

மேற்குவங்க சட்டப்பேரவை 7ம் கட்டத் தேர்தல் நிமித்தமாக நாளை பிரதமர் அம்மாநிலத்தில் 4 இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது பிரச்சாரப் பயணத்தை ரத்து செய்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. 5 கட்டத் தேர்தல் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில் இன்று 6-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மாநிலத்தில் எஞ்சியுள்ள 2 கட்ட வாக்குப்பதிவுகள் முறையே வருகிற 26 மற்றும் 29-ம் தேதிகளில் நடைபெறுகிறது. மே 2-ம்தேதி தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

40 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்