கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மீதான சுங்க வரி நீக்கப்படுவதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடா அறித்துள்ளார்.
கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவர் மருந்துகளை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ரெம்டெசிவர் மருந்துகளை சிலர் கள்ளச்சந்தையில் பதுக்கி அதிகமான விலைக்கு விற்பனை செய்வதும், செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி லாபம் பார்ப்பதும் தொடர்ந்து வருகிறது.
இதைத் தடுக்க மகாராஷ்டிர அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல உத்தரப் பிரதேச அரசும் கடும் நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.
» கூடுதல் ரயில்கள்: தேவைக்கேற்ப இயக்க தயார்; ரயில்வே அறிவிப்பு
» கரோனாவுக்கு அஞ்சாத போராட்ட விவசாயிகள்: கோதுமை அறுவடைக்குப் பின் டிக்ரி எல்லை திரும்பினர்
இந்தநிலையில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டி. வி சதானந்த கவுடா தனது ட்வி்ட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ மருந்துகள் துறையின் பரிந்துரை மீதான உடனடி தேவையை கருத்தில் கொண்டு, ரெம்டெசிவிர் மற்றும் அதன் ஏபிஐ/கேஎஸ்எம் மீதான சுங்க வரியை வருவாய்த்துறை நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை நாட்டில் ரெம்டெசிவர் ஊசி கிடைப்பதை அதிகரிக்கும்’’ என கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago