மத்திய அரசின் கரோனா தடுப்பூசிக் கொள்கைகளால் ஏழைகள், விளிம்புநிலையில் இருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுவார்கள். இது பாகுபாடு கொண்ட கொள்கை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என மத்திய அரசு அனுமதியளித்தது.
அதுமட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகள், மாநிலங்கள் நேரடியாக மருந்து நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசியைக் கொள்முதல் செய்யலாம் என்று தெரிவித்தது. 50 சதவீதம் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், 50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.
மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையால், தடுப்பூசிக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலை இருக்காது, வசதி படைத்தவர்கள், பணம் படைத்தவர்கள் மட்டுமே தடுப்பூசி வாங்கி செலுத்திக் கொள்ளக்கூடிய நிலை உருவாகும், பாகுபாட்டை அதிகரிக்கும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் மத்திய அரசின் தடுப்பூசிக் கொள்கை குறித்து விமர்சித்துள்ளார். அதில், “மத்திய அரசின் புதிய தடுப்பூசிக் கொள்கையால் 18 வயது முதல் 45 வயதுள்ளவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி கிடைக்காது.
இடைத்தரகர்கள் தடுப்பூசிகளை வாங்கி வைத்துக்கொண்டு விருப்பம்போல் விலை வைத்து விற்பார்கள். குறிப்பாக விளிம்புநிலை சமூகத்தில் இருக்கும் மக்களுக்குத் தடுப்பூசி கிடைக்க எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இந்திய அரசின் தடுப்பூசித் திட்டம் பாகுபாடு உடையது, எந்தவிதமான பகிர்மானக் கொள்கையும் இல்லை, திட்டமிடலும் இல்லை.
இந்தியா ஆக்சிஜன் இல்லாமல் மூச்சுத் திணறுகிறது. சுயதிருப்தி கொள்ளும் இந்திய அரசுக்கும், அதன் திறமையின்மைக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago