காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய அமைச்சர்கள் அரசியல் தலைவர்கள், முதல்வர்கள் என பலரும் முதல் அலையில் கரோனா தொற்றுக்கு ஆளாகினர். 2-வது அலையிலும் பலரும் இலக்காகி வருகின்றனர்.
சமீபத்தில் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், காங்கிரஸ் கட்சியிலும் ரண்தீப் சுர்ஜேவாலா, திக்விஜய் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் என பல தலைவர்கள் பாதி்க்கப்பட்டனர்.
இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
» கரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
» 5 நகரங்களில் ஊரடங்கு இல்லை: உயர் நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்
‘‘லேசான அறிகுறியை உணர்ந்ததால் கோவிட் பரிசோதனை செய்து கொண்டேன். அதில் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அண்மையில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கரோனா கட்டுப்பாட்டு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள்’’ எனக் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago