கரோனா தடுப்பூசி நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

By செய்திப்பிரிவு

நாடுமுழுவதும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை செய்கிறார்.

நாடுமுழுவதும் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக 2 லட்சத்திற்கு மேலாக கரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒருபுறம் தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் கரோனா கட்டுப்பாடுகளும் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டு வருகின்றன.


இந்த சூழலில் கரோனா பாதிப்புகளை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து
மருந்து உற்பத்தி தொழில் தலைவர்களுடன் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அப்போது பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மருந்து உற்பத்தி துறையின் முக்கிய பங்களிப்பை பிரதமர் பாராட்டினார்.

கடினமான சூழ்நிலைகளிலும் சிறப்பாக பணியாற்றி வரும் மருந்து உற்பத்தி தொழில் துறையை பிரதமர் திரு மோடி பாராட்டினார்.

மருந்து உற்பத்தி தொழில்களின் முயற்சிகளால் தான் உலகின் மருந்தகமாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார். பெருந்தொற்றின் போது அத்தியாவசிய மருந்துகளை 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்ப முடிந்தது என்றும் அவர் கூறினார்.

அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், 18 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் எட்டி தனது திறமையை இந்திய மருந்து உற்பத்தி துறை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார்.

இந்தநிலையில் மே 1-ந்தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு காணொலி காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது கரோனா தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் தடுப்பூசிகள் பயன்பாட்டை அதிகரிப்பது, கரோனாவை கட்டுப்படுத்த உதவும் மாற்று மருத்துவ வழிமுறைகள் உள்ளிட்டவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்