கரோனா பரவல்;  நாடாளுமன்றத்தை கூட்டி விவாதிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலையின் பிடிக்குள் இந்தியா சிக்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் கரோனாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்கள் வார இறுதி ஊரடங்கையும், பல கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 15ம் தேதி 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டு அது தொடர்ந்து வருகிறது.

இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:

கரோனா பரவல் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும். மகாராஷ்டிரா மட்டுமின்றி நாட்டின் பல மாநிலங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த சூழல் பற்றி விவாதிக்க வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ள தலைவர்களிடமும் பேசி வருகிறேன். அவர்களும் இதையே தான் சொல்கிறார்கள். எனவே அரசு நாடாளுமன்றத்தை கூட்டி உடனடியாக விவாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்