இந்தியாவில் இதுவரையில் இல்லாத வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,619 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை, 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 1,619 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது.
» கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
» கரோனா பரவலை தடுக்க ஏப்ரல் 30 வரை டெல்லியின் ஹசரத் நிஜாமுதீன் தர்கா மூடல்
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 12 கோடியைக் கடந்துள்ளது.
கரோனா பாதிப்பு: 24 மணி நேர புள்ளிவிவரம்:
24 மணி நேர பாதிப்பு: 2,73,810
மொத்த பாதிப்பு: 1,50,61,919
சிகிச்சையில் உள்ளோர்: 19,29,329
மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை: 1,29,53,821
நேற்று ஒருநாள் குணமடைந்தோர்: 1,44,178
மொத்த இறப்பு எண்ணிக்கை: 1,78,769
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை: 12,38,52,566 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேர பாதிப்பு மிகவும் அதிகமாகவுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 68,631 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில், 25,462 பேருக்கும், கர்நாடகாவில் 19,067 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. பெங்களூருவில் 12,793 பேருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 14 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 30 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago