வீரதீர விருது பெற்ற திருமகன்களுக்கு புதிய முறையில் மரியாதை அளிக்க ஓர் வாய்ப்பு

By செய்திப்பிரிவு

வீர தீர விருதுகளை வென்றவர்களின் அழியாத துணிச்சலும் தியாகமும் நாட்டின் நினைவலையில் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றன. வீரதீர விருதுகளுக்கான இணையதளம் (www.gallantryawards.gov.in), நாட்டின் வீர தீர விருது வென்றவர்களை நினைவு கூர்ந்து, மரியாதை செலுத்துவதற்கான முன்னணி இணையதளமாக விளங்குகிறது.

நாட்டின் வீரத்திருமகன்களுக்கு புதுமையான முறையில் மரியாதை செலுத்துவதற்கான போட்டிக்கு வீரதீர விருதுகள் இணையதளம் ஏற்பாடு செய்துள்ளது.

வீரதீர விருது பெற்றவர்களுக்குத் தகுந்த முறையில் மரியாதை செலுத்துவதே இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். ஏப்ரல் 15 முதல் மே 15 வரை இந்தப் போட்டி நடைபெறும்.

படைப்பாற்றல், அசல் தன்மை, எளிமை, வீர தீர விருதுகள் தளத்தின் நோக்கம் மற்றும் தொலைநோக்கு பார்வை எவ்வாறு எடுத்துரைக்கப்படுகின்றன ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்படும். வெற்றி பெற்றவர்களின் விவரங்கள், வீரதீர விருதுகளுக்கான இணையதளத்திலும் அதன் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்படும்.

வெற்றி பெறுபவர்கள், 2022-ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள்.‌ இந்தப் போட்டியில் கலந்து கொள்ள

https://www.gallantryawards.gov.in/single_challenge/event/46 என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்