காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான திக்விஜய் சிங், தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, அகாலி தளம் கட்சியின் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2.17 லட்சம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரோன்மணி அகாலிதளம் கட்சியின் எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஹர்சிம்ரத் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. லேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன. என்னை நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துள்ளேன். அதேபோல என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று காலை உறுதியானது. என்னுடன் கடந்த சில நாட்களில் நெருங்கிய தொடர்பில் இருந்தோர் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “நான் கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குத் தொற்று இருப்பது உறுதியானது. என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என்னுடைய தொடர்பில் இருந்தோரும் தனிமைப்படுத்திக் கொண்டு விரைவாகப் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago