கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்தும் பணி பல்வேறு மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் கரோனா தடுப்புப் பரவல் அதிகமாக உள்ள முதல் 8 மாநிலங்களில் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரம் மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
மகாராஷ்டிராவில் ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
» அரியலூரில் ஒரே தெருவில் 3 பேருக்கு கரோனா தொற்று
» முகக்கவசம் அணியாதவர்கள் சமூகத்தின் எதிரிகள்: புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு
ராஜஸ்தானில் 89 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸ் பெற்றுள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில் 86 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. 14 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
குஜராத்தில் 86 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 12 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 73 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 62 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவில் 59 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
கேரளாவில் 47 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் முதல் டோஸைப் பெற்றுள்ளனர். 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டாம் டோஸைப் பெற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago