நாடு முழுவதும் நடைபெற்றுவரும் தடுப்பூசித் திருவிழா மூன்றாவது நாளில் நுழையும் தருணத்தில், நாட்டில் போடப்பட்டுள்ள கோவிட்-19 தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 10.85 கோடியை இன்று கடந்துள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 16,08,448 முகாம்களில் 10,85,33,085 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 40 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
87-வது நாளான நேற்று (ஏப்ரல் 12, 2021), நாடு முழுவதும் 40,04,521 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்பட்டது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 41,69,609 டோஸ்கள் வழங்கப்பட்டு, தினசரி செலுத்தப்படும் தடுப்பூசியின் எண்ணிக்கையில் சர்வதேச அளவில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 1,61,736 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா ஆகிய பத்து மாநிலங்களில் அன்றாட கோவிட் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் பதிவான புதிய பாதிப்புகளில் இந்த மாநிலங்களில் மட்டும் 80.80 விழுக்காடு பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 51,751 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 13,604 பேரும், சத்தீஸ்கரில் 13,576 பேரும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் தற்போது 12,64,698 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் 9.24 சதவீதமாகும்.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,22,53,697 ஆக (89.51%) இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 97,168 பேர் புதிதாகக் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 879 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago